சீன கப்பலை ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிட அனுமதி

Yuan Wang 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி

by Staff Writer 14-08-2022 | 3:12 PM

Colombo (News 1st) யுவான் வேங்-5 (Yuan Wang 5) சீன கப்பலை, ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் ஆகஸ்ட் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைவதற்கு எற்பாடு செய்யப்பட்ட நிலையில் கப்பலின் வருகையைத் தாமதப்படுத்துமாறு வௌிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள சீன தூதரகத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. 

Yuan Wang 5 கப்பல் ஆகஸ்ட் 16ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக நேற்று முன்தினம்(12) சீனத் தூதரகம் அறிவித்ததாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.