.webp)
கட்டணம் அறவிட்டு முழுநேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கை கிடைத்ததன் பின்னர் முழுநேரம் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே எதிர்வரும் 13 ஆம் திகதி 40 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெய்யுடனான கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.