.webp)
முன்னாள் மாகாண சபை உறுப்பினரான நிஹால் வெதஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 09 ஆம் திகதி தங்காலையில் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவத்தின் பின்னர் அவர் தலைமறைவாகியிருந்தமையால் கைது செய்வதற்கு தாமதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.