.webp)
China: கிழக்கு சீனாவில் பரவிவரும் புதிய வகை வைரஸ் தொற்றால் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு சீனாவில் பரவிவரும் LayV (The novel Langya henipavirus) என்ற புதிய வகை வைரஸ் விலங்குகளில் இருந்து பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
LayV வைரஸ் சீனாவின் Shandong மற்றும் Henan மாகாணங்களில் பரவியுள்ளது
காய்ச்சல், சோர்வு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களிடம் கண்டறியப்பட்டுள்ளன.
சீனா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்
LayV தொற்று ஆபத்தானது அல்லவென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தொற்று தொடர்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.