.webp)
Colombo (News 1st) நீர் மற்றும் மனித கழிவுகளை கொண்டு செல்வதற்கான கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கான சேவையை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.