.webp)
Colombo (News 1st) நடமாடும் வாகன சேவையூடாக நான்காவது கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அடையாளங்காணப்பட்ட மற்றும் தேவைக்கேற்ப நடமாடும் வாகனங்களூடாக தடுப்பூசிகளை செலுத்துவற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த குறிப்பிட்டார்.
இதனை தவிர, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மற்றும் பிரதான வைத்தியசாலைகளில் நான்காவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.