.webp)
Ukraine: உக்ரைன் துறைமுகத்திலிருந்து 58,041 மெட்ரிக் தொன் சோளம் அடங்கிய மூன்று கப்பல்கள் வௌியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல்கள் மூலம் 12,000 மெட்ரிக் தொன் சோளம் துருக்கிக்கும், 13,041 மெட்ரிக் தொன் சோளம் பிரித்தானியாவிற்கும் 33,000 மெட்ரிக் தொன் சோளம் அயர்லாந்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தத்தின் கீழ் தானியங்கள் அடங்கிய முதலாவது உக்ரைன் கப்பல் கடந்த திங்கட்கிழமை லெபனான் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.