.webp)

Colombo (News 1st) ரட்டா என்றழைக்கப்படும் ரதிந்து சேனாரத்ன இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் அவர் ஆஜராகியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் பத்தும் கேர்னர் தொடர்பில் சாட்சியம் வழங்க ரட்டா தானாக முன்வந்திருந்தார்.
இதற்கு முன்னதாக, இன்று அவருக்கும் மற்றுமொரு சந்தேகநபருக்கும் வௌிநாட்டு பயணத்தடையை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிற்குள் முறையற்ற வகையில் மக்களை ஒன்றுகூட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், கோட்டை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வௌிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
