இருவேறு பகுதிகளில் விபத்தில் மூவர் பலி

இருவேறு பகுதிகளில் விபத்தில் மூவர் பலி

by Bella Dalima 01-08-2022 | 7:38 PM

​Colombo (News 1st) தங்காலை மற்றும் தனமல்வில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

தங்காலை - ஹேனக்கடுவயில் காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனமல்வில - உடவலவ வீதியின் சூரியஆர பகுதியில் டிப்பரொன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் டிப்பரின் சாரதி காயமடைந்துள்ளார். சாரதியின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.