Backstroke நீச்சல் போட்டியில் புதிய இலங்கை சாதனை

2022 பொதுநலவாய விளையாட்டுகள்: Backstroke நீச்சல் போட்டியில் அகலங்க பீரிஸ் புதிய இலங்கை சாதனை

by Bella Dalima 31-07-2022 | 8:44 PM

Colombo (News 1st)  2022 பொதுநலவாய விளையாட்டுகளில் ஆண்களுக்கான 50 மீட்டர் Backstroke நீச்சல் போட்டியில் அகலங்க பீரிஸ் புதிய இலங்கை சாதனை படைத்தார்.

இன்று நடைபெற்ற ஆறாவது முதற்சுற்று போட்டியில் 26.15 விநாடிகளில் நீந்தி இந்த சாதனையை புரிந்தார்.

கடந்த ஜூன் மாதம் நிலைநாட்டப்பட்ட 26.22 விநாடிகள் என்ற சாதனை நேரத்தை அகலங்க பீரிஸ் இன்று முறியடித்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான பளுதூக்கல்  போட்டியின் 67 கிலோகிராம் எடைப்பிரிவில்  கலந்துகொண்ட சதுரங்க லக்மால் ஜயசூரிய 5 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Snatch முறையில் 119 கிலோ எடையை தூக்கி இலங்கை சாதனையை சமன் செய்தார்.

Clean and jerk முறையில் 140 கிலோ எடையை தூக்கி, மொத்தமாக 259 கிலோ தூக்கினார்.