.webp)
Colombo (News 1st) சீனாவின் ஆய்வுக் கப்பலான Yuan Wang 5 எனும் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் இலங்கைக்கு வரப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்த போதிலும், நேற்றைய தினம் கப்பல் வந்ததை உறுதிப்படுத்தியது.
இந்த கப்பல் ஆகஸ்ட் 11 மற்றும் 17 ஆம் திகதிக்கு இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு, வசதிகளை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சியாங் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொண்டதன் பின்னர் இந்திய பெருங்கடலில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.
சர்ச்சையை தோற்றுவித்துள்ள சீனாவின் யூஆன் வேங் 5 எனும் கப்பல்சர்ச்சையை தோற்றுவித்துள்ள சீனாவின் Yuan Wang-5 கப்பல்
Posted by Newsfirst.lk Tamil on Sunday, July 31, 2022