.webp)
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுவிக்கப்படுவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் அந்நாளுக்காக காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார்.
மக்கள் மனதை வென்ற அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என தானும் அனைத்து அரசியல்வாதிகளும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மனிதாபிமானமிக்க அரசியல்வாதியாக, மக்கள்சார் கலைஞராக, மக்கள் செல்வாக்குள்ள பிரபலமாக திகழும் ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திர குடிமகனாக சமூகத்திற்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காக பாடுபடுவதை பார்ப்பதே ஒரே நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.