மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

by Staff Writer 27-07-2022 | 12:01 PM
Colombo (News 1st) பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 6 இலங்கை பிரஜைகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தனுஷ்கோடி - கம்பிபாடு கடற்கரையை சென்றடைந்த 6 பேரையும் இராமேஸ்வரம் கடற்கரை பொலிஸார், மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி - பளை பகுதியைச் சேர்ந்த 6 பேரே அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். இவர்களில் 3 சிறுவர்கள் அடங்குவதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து சென்ற 129 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.