.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung-ஐ இன்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், ஜனாதிபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பின்னர், சிநேகபூர்வ சந்திப்பினை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை வலுவான அணுகுமுறையின் மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால பணிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.