தேரர்களின் கூடாரங்கள் அகற்றப்பட்டன

காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அருகில் இருந்த தேரர்களின் கூடாரங்கள் அகற்றப்பட்டன

by Bella Dalima 27-07-2022 | 8:40 PM

Colombo (News 1st)  காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க சிலையின் அமைவிடத்திற்கு அருகிலுள்ள பௌத்த தேரர்கள் சிலரின் கூடாரங்களை அகற்றுமாறு பொலிஸார் இன்று மீண்டும் அறிவித்தல் வழங்கினர்.

குறித்த பகுதிக்கு சென்றிருந்த பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

தேரர்கள் அங்கிருந்து கூடாரங்களை அகற்றிவிட்டு செல்லாவிட்டால், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி ஏற்படும் என பொலிஸார் இதன்போது எச்சரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து, எவருக்கும் பிரச்சினை கொடுக்க விரும்பவில்லை என தெரிவித்து, தேரர்கள் இன்று நண்பகல் 12 மணியளவில் தமது கூடாரத்தை அகற்றினர்.