.webp)
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் இன்று (27) மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால நிலை பிரகடனம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அவசரகால நிலை பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து, பாராளுமன்றம் அடுத்த மாதம் 09 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலை அறிவிப்பு இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2022 ஜூலை 17 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதில் ஜனாதிபதியினால் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டதுடன், சட்ட விதிகளுக்கு அமைய அவசரகால நிலை பிரகடனம் 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால் இரத்தாகிவிடும்.
இந்த நிலையில், இது தொடர்பில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், தற்போது அமுலிலுள்ள அவசரகால நிலை 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.