.webp)

Japan: ஜப்பானில் குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான முதலாவது நபர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவிலிருந்து ஜப்பான் சென்றிருந்த 30 வயதான நபர் நோய் தொற்றாளராக அடையாளங்காணப்பட்டுள்ளதாக டோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் குரங்கு அம்மை நோயை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக கடந்த சனிக்கிழமை அறிவித்தது.
இதுவரை குரங்கு அம்மை நோய்த்தொற்றால் 74 நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
