.webp)

Australia: அவுஸ்திரேலியாவில் COVID தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
COVID தொற்றுக்குள்ளான 5,600 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும் நேற்று முன்தினம் மாத்திரம் 102
COVID மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 7 நாட்களில் மாத்திரம் 3,30,000 பேர் COVID தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றுக்குள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கை அதனை விடவும் இரு
மடங்காக இருக்கலாமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் மாத்திரம் 8 வீதத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள், காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
