ஜனாதிபதி ரணிலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வாழ்த்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின்

by Staff Writer 25-07-2022 | 6:08 PM

Colombo (News 1st) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெட்ரி(Yury Materiy), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விளாடிமிர் புட்டினின் வாழ்த்துச் செய்தியை இன்று(25) கையளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தமது வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்.

'' ரஷ்யா - இலங்கைக்கு இடையிலான உறவு மிகவும் பாரம்பரியம் கொண்டது. அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வளப்படுத்துவார் என நம்புகிறேன். அதேபோன்று மக்களுக்கான உற்பத்தி, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் இரு தரப்பு ஒத்துழைப்பை உருவாக்க முடியும் என்பதே எதிர்பார்ப்பு''