வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் இரு பஸ்களை மோதியது

வேக கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் இரு பஸ்களை மோதியது

by Staff Writer 24-07-2022 | 4:47 PM

Colombo (News 1st) மணல் ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று இரு பஸ்களை மோதி தப்பிச்சென்றுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடத்தடி பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இரு பஸ்களுடன் மோதியுள்ளது.

விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. 

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற வாகனமொன்றே இவ்வாறு இரு பஸ்களையும் மோதிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.