மேலுமொரு சமையல் எரிவாயு கப்பல் நாட்டிற்கு...

மேலுமொரு சமையல் எரிவாயு கப்பல் நாட்டிற்கு...

by Staff Writer 24-07-2022 | 3:26 PM

Colombo (News 1st) சமையல் எரிவாயுவை ஏற்றிய 6ஆவது கப்பல் இன்று(24) பகல் நாட்டை வந்தடைந்தது.

இந்த கப்பலில 3,750 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்டு வரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று(23) நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

நேற்றைய தினமும்(23), 3740 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கு முன்னுரிமையளித்து இன்று(24) எரிவாயு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.

நாளை(25) ஏனைய மாகாணங்களுக்கு முன்னுரிமையளித்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளன.