கொடிச்சீலை வடிவமைப்பாளர்களுக்கான காளாஞ்சி

நல்லூர் வருடாந்த மகோற்சவ பெருவிழா: கொடிச்சீலை வடிவமைப்பாளர்களுக்கான காளாஞ்சி கையளிப்பு

by Chandrasekaram Chandravadani 24-07-2022 | 9:43 PM

Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை வடிவமைப்பாளர்களுக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24) இடம்பெற்றது. 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(24) காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து வள்ளியம்மை திருக்கல்யாண படிப்பும் பந்தல்கால் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி வழங்குவதற்காக ஆலய பிரதம சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் ஆலயத்திலிருந்து புறப்பட்டனர்.

காளாஞ்சி, மாட்டுவண்டியின் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் காளாஞ்சியும் கொடிச்சீலை உபயகாரரிடம் கையளிக்கப்பட்டது.

அலங்கார கந்தன் என அகிலம் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.