பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமனம் 

ஐ.தே.க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமனம் 

by Bella Dalima 22-07-2022 | 10:39 PM

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வெற்றிடமாகிய தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

வஜிர அபேவர்தனவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.