ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி; அசாத் சாலி வாழ்த்து

ஜனாதிபதியாக ரணிலை பாராளுமன்றம் தெரிவு செய்திருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி: அசாத் சாலி 

by Bella Dalima 20-07-2022 | 9:10 PM

Colombo (News 1st) எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் தெரிவு செய்திருப்பது   ஜனநாயகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணியின்  தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல பாதைகளைக் கடந்து வந்தவர் என அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலில் எத்தனை சவால்களை எதிர்கொள்ள நேர்ந்த போதும், ஒரு நாளும்  ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்ததில்லை என தெரிவித்துள்ள அசாத் சாலி,  முக்கியமான காலகட்டத்தில் பல தியாகங்கள் செய்து நாட்டையும் மக்களையும் பாதுகாத்த பெருமை அவருக்குண்டு எனவும் கூறியுள்ளார்.

நெருக்கடியான நேரங்களில் கூட துணிந்து நின்று பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட அவரது முன்னுதாரணம், அரசியல் முதிர்ச்சியையே காட்டுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.