பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்யவுள்ள IMF

இலங்கை தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய IMF எதிர்பார்ப்பு 

by Bella Dalima 20-07-2022 | 5:39 PM

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தையை இயன்றளவு விரைவில் நிறைவு செய்ய சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்பார்ப்பதாக முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்ததன் பின்னர் எரிபொருள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களின் நல்வாழ்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் அக்கறை கொண்டுள்ளதாக ஜப்பானின் Nikkei Asia செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளார்.

அடுத்த தலைவர் நாட்டின் நலனுக்காக செயற்படும் பட்சத்தில், இலங்கையின் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படத் தயார் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், எந்தவொரு நாடும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அதனை தவிர்ப்பதில் எந்த பயனும் இல்லை எனவும் Kristalina Georgieva குறிப்பிட்டுள்ளார்.