முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் முன்னிலை

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் 4 விக்கட்களால் வெற்றி

by Bella Dalima 20-07-2022 | 9:02 PM

Colombo (News 1st) இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்களால் வெற்றியீட்டியது.

342 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய பாகிஸ்தான், நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர நிறைவில் 3 விக்கட்களை இழந்து 222 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்று ஆட்டத்தைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 6 விக்கட்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

காலியில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 222 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 218 ஓட்டங்களையும் பெற்றன.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 337 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அப்துல்லா ஷாஃபிக் தெரிவானார்.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கின்றது.