ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவாரா?

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பம் - விஜேதாச ராஜபக்ஸ

by Staff Writer 17-07-2022 | 2:54 PM
Colombo (News 1st) சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் அனைத்து அறிக்கைகளும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். குறித்த அறிக்கைகளை ஆராய்ந்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர், அவரை விடுவிப்பது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார். அதன்பின்னர் அவரை விடுதலை செய்வது குறித்து பதில் ஜனாதிபதியால் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.