ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்தது 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் கிடைத்தது

by Bella Dalima 14-07-2022 | 9:11 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் ஒன்று சிங்கப்பூர் தூதரகம் ஊடாக தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கடிதத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி, அனைத்து சட்டப்பூர்வமான விடயங்களையும் நிறைவு செய்த பின்னர் உத்தியோகபூர்வமாக நாளை (15) அறிவிப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சபாநாயகரின் ஊடக செயலாளர் இந்துநில் அபேவர்தனவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.