by Staff Writer 11-07-2022 | 7:08 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விடுக்கும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டு அவர் ஊடாக மாத்திரமே வௌியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் இன்று(11) அறிவித்துள்ளது.
ஆகவே சபாநாயகர் விடுக்கும் அறிவித்தல்களை மாத்திரம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாக ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் வலியுறுத்தியுள்ளது.