by Staff Writer 11-07-2022 | 3:24 PM
Colombo(News 1st) வறிய மக்களின் கருத்துக்களை கவனத்திற்கொள்ளாதிருக்க வேண்டாம் என பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கையின் ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால் தொடர்ச்சியாக துன்பப்படும் இலங்கை மக்களின் துன்பத்தில் தாமும் பங்கெடுப்பதாக பரிசுத்த பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் அமைதி ஏற்பட வேண்டும் என பேராயர்களுடன் இணைந்து பிரார்த்திப்பதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.