by Bella Dalima 10-07-2022 | 7:39 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மாளிகையில் இருந்து 1,78,50,000 ரூபா பணம் மீட்க.
நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தவர்களால் இந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பணத்தைக் கண்டுபிடித்த மக்களும் இணைந்து கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அதனை கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நாளை அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.