by Bella Dalima 06-07-2022 | 8:05 PM
Colombo (News 1st) கொழும்பு செத்தம் வீதி ஊடாக ஜனாதிபதி மாளிகை நோக்கி பயணிக்க முயற்சித்த ஐக்கிய விவசாய சக்தியின் உறுப்பினர்களை கலைப்பதற்கு பொலிஸார் இன்று பல தடவைகள் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை பிரயோகம் காரணமாக பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்வதற்காக ஐக்கிய விவசாய சக்தி இன்று கொழும்பிற்கு வந்தது.
பெரும்போக அழிவிற்கான இழப்பீட்டை அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுவை தாக்கல் செய்த பின்னர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் இருந்து ஒல்கொட் மாவத்தை ஊடாக ஜனாதிபதி அலுவலகம் வரை அவர்கள் போரணியாக சென்றனர்.