by Bella Dalima 01-07-2022 | 5:06 PM
Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.
சம்பவம் தொடர்பான தரவுகளை சேகரிப்பதற்காக, தமது அதிகாரிகள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க குறிப்பிட்டார்.
குறித்த குழுவினரால் வழங்கப்படும் அறிக்கைக்கு அமைய , சம்பவம் தொடர்பில் முழுமையான சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார்.