by Bella Dalima 29-06-2022 | 4:21 PM
Colombo (News 1st) உணவு பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரச உணவு உற்பத்தி நிறுவன அதிகாரி ஒருவர் இந்த குழுவிற்கு நியமிக்கப்படவுள்ளார்.
இந்த குழு தொடர்புடைய நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்து, சந்தையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு குறித்து மீளாய்வு செய்யவுள்ளது.