IMF பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல் 

IMF பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல் 

by Bella Dalima 20-06-2022 | 4:49 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள கடன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடலை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளது. ஜனாதிபதி, நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடனும் இவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே, நாட்டிற்கு தற்போது வருகை தந்துள்ள இலங்கைக்கான கடன்களை மறுசீரமைப்பதற்கான நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான Lazard மற்றும் Clifford Chance ஆகியவற்றின் பிரதிநிதிகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.