by Bella Dalima 20-06-2022 | 4:41 PM
Colombo (News 1st) புத்தளம் - ஆராச்சிக்கட்டு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் உறுப்பினரான 38 வயதான ஜகத் சமந்த என்பவரே கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஒருவர் மீது
தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.