அவுஸ்திரேலியாவிடம் இருந்து $50 Mn நிதியுதவி

இலங்கைக்கு அவுஸ்திரேலியாவிடம் இருந்து 50 மில்லியன் டொலர் நிதியுதவி 

by Bella Dalima 20-06-2022 | 4:02 PM
Colombo (News 1st) இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதார தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான, நீண்டகால நட்புறவு காணப்படுவதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள மூன்று மில்லியன் மக்கள் தங்களின் நாளாந்த உணவுத் தேவையை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அவசர நிதிக்காக, உலக உணவுத் திட்டத்தினூடாக 22 மில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் அபிவிருத்திக்கான நிதியுதவியாக 23 மில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.