by Bella Dalima 19-06-2022 | 4:34 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 21 இலங்கை பிரஜைகள் இன்று (19) முற்பகல் நாட்டை வந்தடைந்தனர்.
குறித்த 21 பேரும் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட
போது, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர், விசேட விமானம் மூலம் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புத் தொடுவாய் மற்றும் மாரவில பகுதிகளைச்
சேர்ந்தவர்களே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டு கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிறிஸ்துமஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள மேலுமொரு குழுவினரை நாளைய தினம் நாட்டிற்கு அழைத்து வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.