by Staff Writer 18-06-2022 | 4:01 PM
Colombo (News 1st) தற்போது கையிருப்பிலுள்ள அரிசி எதிர்வரும் 7 மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரிசி இறக்குமதி தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதனால் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது எனவும் பருப்பு மற்றும் சீனிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த வாரம் இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் அறிவிக்கப்பட்டதுடன், வர்த்தகர்களுடனும் கலந்துரையாடப்பட்டதாக வர்த்தக வாணிப மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த வாரமளவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.