காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பான சர்ச்சை கவலையளிக்கிறது: அதானி நிறுவனம் தெரிவிப்பு

by Staff Writer 14-06-2022 | 4:07 PM
Colombo (News 1st) இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கவலையடைவதாக இந்தியாவின் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் பேச்சாளர் ஒருவர் இந்திய ஊடகமொன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் வேலைத்திட்டம் இலங்கை, இந்தியாவிற்கிடையிலான தொடர்பிற்கு முக்கியமானதெனவும் அவர் தெரிவித்துள்ளார். அயல் நாடான இலங்கையில் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதே தமது நிறுவனத்தின் எதிர்பார்ப்பு எனவும் அதானி குழுமத்தின் பேச்சாளர் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்