by Bella Dalima 10-06-2022 | 4:59 PM
Colombo (News 1st) பொது நிர்வாக அமைச்சினால் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 13) விசேட அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூரணை தினம் என்பதால், அன்றைய தினமும் பொது விடுமுறை நாளாகும்.