by Staff Writer 08-06-2022 | 7:19 AM
Colombo (News 1st) இன்றைய தினமும்(08) வீட்டுப் பாவனைக்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளது.
அதன் பின்னரே எரிவாயு விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், எரிவாயுவை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.