by Staff Writer 05-06-2022 | 3:09 PM
Colombo (News 1st) நாளை(06) முதல் தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதமாக குறைக்கப்படும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீண்ட தூர பஸ்களின் சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார கூறியுள்ளார்.
இதனிடையே, பயணிகள் பஸ் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் R.W.R. பிரேமசிறி தெரிவித்தார்.