நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2,393 பேர் கைது

by Staff Writer 04-06-2022 | 8:41 PM
Colombo (News 1st) கடந்த மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை  2,393 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1055 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எனினும், கடந்த 9 ஆம் திகதி மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டக்களத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 74 வருட ஊழலை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று முறபகல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, மக்களிடம் கையொப்பம் பெறும் செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது.