by Staff Writer 01-06-2022 | 8:05 PM
Colombo (News 1st) மே மாதம் 9 ஆம் திகதி அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதன் பின்னர் ஏற்பட்ட நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்த அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்திற்காக தாம் பதவி விலகியதாக அவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு கூறினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு தமது விசேட பிரதிநிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வலலியத்தவை கடந்த மே மாதம் 17 ஆம் திகதி நியமித்தது.
இந்த குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.