by Staff Writer 31-05-2022 | 8:09 AM
Colombo (News 1st) நாட்டில் தற்போது பெய்துவரும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதனடிப்படையில், மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, புத்தளம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.