தேசபந்து தென்னகோனுக்கு 14 நாட்கள் விடுமுறை

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்துவிற்கு 14 நாட்கள் விடுமுறை

by Staff Writer 30-05-2022 | 8:40 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார். இந்த காலப்பகுதியில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் D.J. பலிஹக்கார, மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக செயற்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பலிஹக்கார தற்போது பிரஜா பொலிஸ் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பாளராக செயற்படுகின்றார்.