சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

அட்டலுகம சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வௌியானது

by Staff Writer 30-05-2022 | 5:10 PM
Colombo (News 1st) பண்டாரகம - அட்டலுகம பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 09 வயதான சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று(30) பாணந்துறை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் கொலை தொடர்பில் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் இன்று(30) கைது செய்யப்பட்டார். கடந்த வௌ்ளிக்கிழமை (27) காலை முதல் காணாமல்போயிருந்த பண்டாரகம - அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமியின் சடலம் கடந்த சனிக்கிழமை(28) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தது.