by Staff Writer 25-05-2022 | 2:17 PM
Colombo (News 1st) களு கங்கையின் நீரேந்தும் பகுதிகளிலுள்ள சிறு ஆறுகளில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் வௌ்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் புளத்சிங்கள பகுதியிலுள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, வட மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ்நிலங்களில் மக்களும் அந்த பகுதிகளூடாக பயணிக்கும் வாகன சாரதிகளும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.