by Bella Dalima 19-05-2022 | 8:07 PM
Colombo (News 1st) தமிழக அரசின் ஏற்பாட்டில் 1000 மெட்ரிக் தொன் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மதுரை மாவட்டத்தில் இருந்து 1000 மெட்ரிக் தொன் அரிசி சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
12 அரிசி ஆலைகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக பெறப்பட்ட அரிசி பொதியிடப்பட்டு தூத்துக்குடிக்கு லொறிகளில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அரிசி அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழக அரசாங்கத்தின் முதற்கட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்திருந்தது.